மதுரை வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயானந்த், முருகேசன், சோழ சிவராஜன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், 'வைகை ஆறு செல்லும் வாடிப்பட்டி பகுதியில் தனியார் நிலங்களில் மண் அள்ளுவதற்கு சிலர் அனுமதி பெறுகின்றனர். இந்த அனுமதியை வைத்து, வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிச் செல்கின்றனர். டன் கணக்கில் வாடிப்பட்டி வைகை ஆற்றிலிருந்து சட்ட விரோதமாக மணல் எடுத்துச் செல்கின்றனர்.
வைகை ஆற்றில் சட்ட விரோத மணல் குவாரிகளை தடுக்க வேண்டும் -நீதிபதிகள்
மதுரை: வாடிப்பட்டி வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் குவாரிகள் செயல்படுவதைத் தடுக்க, மதுரை மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதனால் வைகை ஆற்றின் கரை அருகே உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே, வாடிப்பட்டி பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மணல் குவாரிகள் நடைபெறாமல் தடுக்கவும், தடை செய்யவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனமனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படக் கூடாது. இதைத் தடுப்பதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுத்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.