தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நாளை (ஏப்.6) நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் உள்ள 3,856 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்திலேயே மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 3 லட்சத்து 28 ஆயிரத்து 990 வாக்காளர்களும், சோழவந்தான் தொகுதியில் குறைந்த பட்சமாக 2 லட்சத்து 18 ஆயிரத்து 506 பேர் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 2,716 வாக்குப் பதிவு மையங்களில், 3856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 1330 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
மதுரையில் எத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை? மேலும் 5,021 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3856 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3856 விவி பேட் இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு வாகனத்திலும் GPS கருவி பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.
ஏதேனும் வாக்குச்சாவடி மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக 20 சதவிகிதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 3400 மத்திய பாதுகாப்புப் படை, மாநகர, மாவட்ட காவல்துறையினர் என மொத்தம் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'வாக்காளர்களுக்கு அல்வா' - சுயேட்சை வேட்பாளர் சொன்ன சீக்ரெட்