மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று இரவு ஹோட்டலுக்குச் உணவு வாங்கச் சென்ற இவர் அடையாளம் தெரியாத நபர்களால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நள்ளிரவில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை! - police investigate
மதுரை: நள்ளிரவில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் இளைஞர் ஓட ஓட வெட்டிப்படுகொலை!
உயிருக்கு போராடிய மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதிச்சியம் காவல் துறையினர் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.