மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மதுரையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - கடத்தல் தங்கம்
மதுரை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன்(வயது 43) என்பவரது உடமைகளை சோதனை செய்த போது, கைப்பையில் இருந்த அளவீடு கருவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
5 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 151 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது தொடர்பாக, பயணி ஆனந்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.