அரசு மருத்துவமனையில் கழிவுநீர் குழாய் உடைப்பு- தொற்றுநோய் பரவும் அபாயம் - Madurai
மதுரை: அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் இறந்த உடல்களை கழுவும் கழிவுநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
DRAINAGE DAMAGE
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள பிணவறையின் அருகே உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலைக் கழுவும் கழிவுநீர், மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் அனைத்தும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.