தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல்.06) ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணிக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகள்
- உசிலம்பட்டியில் 410 வாக்குச்சாவடிகள்,
- திருப்பரங்குன்றம் 458,
- திருமங்கலம் 402 ,
- சோழவந்தான் 305,
- மேலூர் 346,
- மதுரை மேற்கு 434,
- மதுரை தெற்கு 326,
- மதுரை வடக்கு 347,
- மதுரை கிழக்கு 479,
- மதுரை மத்தி 349 வாக்குச்சாவடிகள் என மாவட்டம் முழுவதும் இரண்டாயிரத்து 716 வாக்குப்பதிவு மையங்களில் மூன்றாயிரத்து 856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரத்து 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள்
- திருப்பரங்குன்றத்தில் 23 பேர்,
- உசிலம்பட்டி 14 பேர்,
- மேலூர் 15 பேர்,
- திருமங்கலம் 24 பேர்,
- மதுரை மேற்கு 15 பேர்,
- மதுரை மத்தி 14 பேர்,
- மதுரை தெற்கு 13 பேர்,
- மதுரை வடக்கு 15பேர்,
- சோழவந்தான் 20 பேர்,
- மதுரை கிழக்கு 15 பேர் என மொத்தம் 158 வேட்பாளர்கள் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் களம் காண்கின்றனர். மேற்கண்ட 10 தொகுதிகளிலும் 18,508 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.