மதுரை: 17 வயது சிறுமியை கார்த்திக் என்ற இளைஞர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி, அந்த இளைஞர் தனது உறவினர் வீட்டில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதை அறிந்த கார்த்திக்கின் நண்பர்கள் ஆதி, ஹரீஸ் ஆகியோர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவர்களின் வன்கொடுமை தொல்லை தாங்க முடியாத அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.