மதுரை அழகர்கோவில் வெள்ளாளபட்டியைச் சேர்ந்த பிரசாத் என்பவரின் மனைவி இந்துமதி. இவர், தனது 3 வயது மகன் ஹர்ஷனுடன், உறவினரான அஜித்குமார் என்பவருடன் கடைக்குப் பொருட்கள் வாங்க தல்லாகுளம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
தாயின் கண் முன்னே மூன்று வயது குழந்தை பலி! - அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை: சாலை விபத்தில் தாயின் கண் முன்னே 3 வயது குழந்தை தலை நசுங்கி பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயின் கண் முன்னே மூன்று வயது குழந்தை தலை நசுங்கி பலி
இருசக்கர வாகனத்தின் முன்பு குழந்தை ஹர்சனையும், பின்புற இருக்கையில் தாய் இந்துமதி ஆகியோருடன் அஜித்குமார் ரோஸ்கோர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள பாரதி உலா சாலையில் வந்த போது, அதிவேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை குலைந்த அஜித்குமார் உட்பட மூவரும் கீழே விழுந்தனர்.
படுகாயமடைந்த அஜித்குமார், இந்துமதி ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திச் சென்ற கார், அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
லாரி ஓட்டுநர் பழனிவேல் மீது வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தற்கொலை!