வயது என்பது ஒரு எண் என்று கூறப்படுவதற்கு எடுத்துக்காட்டு மதுரையைச் சேர்ந்த பழனிதான்! பலருக்கு , பழனி தனது உள்ளூர் 'அகதா'வில் மல்யுத்தத்தை கற்பித்தும், அவரே பயிற்சி செய்தும் வருவதைக் கண்டு ஒரு உத்வேகம் பிறக்கிறது.
சாதிக்க வயது தடை இல்லை! சாதனை படைத்த 93 வயது பெரியவர்! - teaches
மதுரை: மதுரையை சேர்ந்த பழனி என்பவர் 93 வயதிலும் தனது உள்ளூர் 'அகதா'வில் மல்யுத்தம் பயிற்சி செய்தும், கற்ப்பித்தும் வருகிறார்.
சாதிக்க வயது தடை இல்லை! சதனை படைத்த 93 வயது பெரியவர்!
இது பற்றி அவர் கூறுகையில், ”1994 ஆம் ஆண்டில் இந்த மையத்தை தொடங்கினேன். இங்கு கற்பிக்கப்படும் உடற்பயிற்சில் எந்திரங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. நாங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாக மல்யுத்த நுட்பத்தை கற்பித்து வருகிறோம். எனக்கு இப்போது 93 வயதாகிறது. இந்த வயதில்கூட, என்னை உடல் ஆரோக்கியமாக வைத்திருக்கவும், என் மாணவர்களை ஊக்குவிக்கவும் நான் இன்னும் மல்யுத்தம் செய்கிறேன்,"என்றார்.