தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தைப்பூசம்... பக்தர்கள் தரிசனம்! - Thiruparankundram

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அழகுகுத்தியும், பறக்கும் காவடியிலும் சாமி தரிசனம் செய்தனர்.

thiruparankundram-thaipoosam-festival
thiruparankundram-thaipoosam-festival

By

Published : Feb 8, 2020, 4:56 PM IST

ஆறுபடை வீடுகளில் முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மதுரையில் உள்ளது. இன்று தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தினமும் சாமி காலை, மாலை இரு வேளைகளில் வீதி உலா வந்தது. கடந்த 4ஆம் தேதி இந்த கோயிலின் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் களைகட்டிய தைப்பூசம்

இன்று தைபூச தினத்தையொட்டி உற்சவர் சுப்ரமணியர் தேவசேனா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தைப்பூச தினத்தையொட்டி பக்தர்கள் அழகு குத்தியும், பறக்கும் காவடியிலும் வந்து தங்களது நேத்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.

இதையும் படிங்க:கரூர் போக்குவரத்து அலுவலகத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி

ABOUT THE AUTHOR

...view details