மதுரை:திருப்பரங்குன்றம் கோயில் யானையான தெய்வானை யானை கடந்தாண்டு பாகனை தாக்கியது. அதில், பாகன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து புத்துணர்வுக்காக புதுக்கோட்டை முகாமுக்கு தெய்வானை கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், புத்துணர்வு முகாமிலிருந்து இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தெய்வானை அழைத்துவரப்பட்டது.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த திருப்பரங்குன்றம் கோயில் யானை - latest madurai district news
பாகனை கடந்தாண்டு மிதித்துக் கொன்ற திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானைக்கு புதுக்கோட்டை முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டதற்கு பின்பு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த திருப்பரங்குன்றம் கோயில் யானை
பிப்ரவரி ஏழாம் தேதி மேட்டுப்பாளையம் அருகே நடைபெறவுள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதி கொண்டு செல்லப்படவுள்ளது. அந்த யானையுடன் தற்போது, புத்துணர்வு முகாமுக்கு திருப்பரங்குன்றம் யானையும் தயாராகி வருவதாக கோயில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:யானைகள் - மனித மோதல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை.காளிதாஸுடன் கலந்துரையாடல்