திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், இன்று அதிமுக வேட்பாளர் முனியாண்டி கட்சி பிரதிநிதிகளுடன் திரண்டு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அலுவலர் சம்பூர்ணம் முன்னிலையில் அவர் வேட்புமனு உறுதிமொழியை வாசித்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் - ராஜன் செல்லப்பா - byelection
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.
முனியாண்டி வேட்புமனு தாக்கல்
அப்போது பேசிய ராஜன் செல்லப்பா, " திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்வோம்.வரும் 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்" என்றார்.