தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமங்கலம் காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காத மக்கள்!

மதுரை: திருமங்கலம் தற்காலிக காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காத மக்களை திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

By

Published : Mar 31, 2020, 9:29 PM IST

திருமங்கலம் தற்காலிக காய்கறிச் சந்தை  திருமங்கலம் கரோனா  திருமங்கலம் செய்திகள்  thirumangalam temporary market
திருமங்கலம் காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காத மக்கள்

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் மருத்துவ மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவாசியப் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக சந்தையில் கூடுவதை தவிர்க்கும் விதமாக தற்காலிக காய்கறிச் சந்தைகள் அரசு சார்பில் அமைக்கப்பட்டன.

அதன்படி, மதுரையில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடைகளை அமைத்துள்ளனர். இங்கு காய்கறிகளை வாங்குவதற்கு திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று வந்திருந்தனர்.

திருமங்கலம் காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காத மக்கள்

அவ்வாறு வந்திருந்தவர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்திய பின்னர் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: கடன் தொகை செலுத்த மூன்று மாதம் அவகாசம் - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details