மதுரையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் விஜயன் வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். மணிகண்டனின் நண்பரும், அதிமுக நிர்வாகி விஜயனின் மகளும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கு மணிகண்டன் உதவியதால்தான் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஓட்டுநரைக் கொலை செய்ததாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு! - மதுரை ஓட்டுநர் கொலை
மதுரை: திருமங்கலம் அதிமுக நகரச் செயலாளர் தனது ஓட்டுநரை கொலை செய்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கொலை செய்யப்பட்டவரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மணிகண்டன் கொலை வழக்கில் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவாக செயல்படும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே மணிகண்டனின் மனைவி தீபிகா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:காசியை காவலில் எடுக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு!