மதுரையில் நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தென்காசி மற்றும் திருநெல்வேலியை இரண்டு மாவட்டங்களாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. துப்புரவு பணியாளர்களுக்கு பிற மாநிலங்களில் நவீன உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சார்பாக வழங்கப்பட்டது. ஆனால் இன்றும் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சூழல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் அறிவிப்பிலும் நிதி ஒதுக்கீடு வரும் நிலையில், தவிர்க்கப்படாமல் தொடர்வது கண்டிக்கத்தக்கது.
நீட் விலக்கு மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் - திருமா! - திருமாவளவன்
மதுரை: இரண்டு நீட் விலக்கு சட்ட மசோதாக்களை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் அனுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாக்களை குடியரசுத் தலைவர் முன்னதாகவே நிராகரித்துவிட்டார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசு மீண்டும் இரண்டு சட்ட மசோதாக்களை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு மட்டுமல்ல, தற்போது ஐந்தாம் ஆண்டில் மருத்துவக் கல்லூரி முடித்தவர்களுக்கு NEXT என்ற புதிய தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் நீட் விலக்கு கோரி போராட்டம் நடத்துவோம்” என்றார்.