தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்றாவது அலையை எளிதில் எதிர்கொள்ள முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

மதுரை: இரண்டாம் அலையில் சீராக கட்டமைப்பு செய்துள்ளதால் மூன்றாவது அலையை எளிதில் எதிர்கொள்ள முடியும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

dasf
dfas

By

Published : May 14, 2021, 6:38 PM IST

Updated : May 14, 2021, 8:31 PM IST

மதுரையில் கரோனோ தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், ”மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பாக பணியாற்றிவருகின்றன. மதுரைக்கு கூடுதல் படுக்கை ஆக்ஸிஜன் வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்படும்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மொத்தம் 1681 படுக்கைகள் உள்ள நிலையில் மொத்தமுள்ள 1176 ஆக்ஸிஜன் படுகைகள் முழுமையாக நிரம்பி வழியும் நிலையில் ஜீரோ டிலே என்ற 150 படுக்கை வசதி கொண்ட பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

தனியார் நிறுவன உதவியோடு மதுரை தோப்பூரில் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் செய்வதற்கான பணிகள் நாளை முதல் தொடங்கி ஒரு வாரத்திற்குள் 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும். முதல் அலையில் மருத்துவ கட்டமைப்பை சீராக செய்திருந்தால் இரண்டாம் அலையில் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தற்போது இரண்டாம் அலையில் சீராக கட்டமைப்பு செய்துள்ளதால் மூன்றாவது அலையை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

கரோனா மரணங்கள் மறைக்கப்படுவது எந்த விதத்திலும் சரியானதாக இருக்காது. ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது மனசாட்சி இல்லாதவர்களின் செயல். ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Last Updated : May 14, 2021, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details