தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை-போடி அகல ரயில் பாதையில் மீண்டும் சோதனை ஓட்டம்! - அகல ரயில் பாதை

மதுரை: போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (டிச.16) சோதனை ஓட்டம் நடந்த நிலையில் நாளையும் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

ரயில் சோதனை ஓட்டம்
ரயில் சோதனை ஓட்டம்

By

Published : Dec 17, 2020, 6:34 PM IST

மதுரை - போடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் ஆண்டிபட்டிவரை பணிகள் நிறைவடைந்ததால், உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டிவரை நேற்று (டிச.16) சோதனை ஓட்டம் நடைபெற்றது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயிலை தேனி எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத், அப்பகுதி மக்கள் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

இந்நிலையில், நாளை (டிச.18) மீண்டும் தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆனையர் அபய்குமார் ராய் தலைமையில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து காலை 10 மணிக்கு ஆண்டிபட்டி முதல் உசிலம்பட்டிவரை டிராலி மூலமாக சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

ரயில் சோதனை ஓட்டம்

ஆதலால், பொதுமக்கள் யாரும் ரயில் பாதை அருகிலோ அல்லது ரயில் பாதையை கடக்கவோ வேண்டாம் என தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்திற்குள் வந்த ரயில்: மலர்த் தூவி வரவேற்ற எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத்!

ABOUT THE AUTHOR

...view details