மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பல போராட்டங்களுக்குப் பிறகு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2015இல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு இடம் தேர்வுசெய்யப்பட்டது.
ஆனால், அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் உறுதியளித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாக அமைக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.