உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள பிற மாநில மக்களும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளும் ஆன்மிகத்தின் அடிப்படையில் வருகை தருகின்றனர்.
மீனாட்சி கோயிலில் இலவச 'லட்டு' பிரசாதம் இப்போதைக்கு இல்லையாம்! - Meenakshi Amman Temple Free Latu
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைக்கு அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கையையடுத்து, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன், தீபாவளியிலிருந்து பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவந்த நிலையில், கோயில் இணை ஆணையர் நா. நடராஜன், லட்டு தயாரிப்பதற்கான நவீன கருவிகள் கோயிலுக்கு வந்துள்ளன என்றாலும், சோதனை ஓட்டம், உள்கட்டமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்ற காரணத்தால், தீபாவளிக்கு வழங்கவிருந்த இலவச லட்டு பிரசாதத் திட்டம், தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவளிக்குப் பிறகு ஒருநாள் அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவுப்புக் காரணமாக பக்தர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தையை மீட்க களத்தில் இறங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழு!