மதுரை: மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அலுவலர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
'கரோனா 3ஆவது அலையைக்கூட எதிர்கொள்ள அரசு தயார்'- அமைச்சர் கே.என்.நேரு கூட்டம் முடந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, "முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகமாக வெளியே வருவதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வியாபாரிகள், மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டுதான் காலை 10 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா 3ஆவது அலையைக்கூட எதிர்கொள்ள அரசு தயாராகி வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து விநியோக விவகாரத்தில் மக்களை சிரமப்படுத்தக் கூடாது என்ற நோக்கில் அரசு தனியாருக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.
சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தற்காலிக சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் அனைவரையும் வரவேற்றார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் பாராட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள் - மக்கள் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்