தமிழ்நாட்டில் நீட் தேர்வால் கடந்த 12ஆம் தேதி அடுத்தடுத்து மூன்று மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மதுரை மாணவி ஜோதி துர்கா எழுதி வைத்துச் சென்ற கடிதம் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. இதுபோன்ற மரணங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது என அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் எதிரொலியாக மதுரையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. மதுரை ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், மனநல மருத்துவர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று மாணவர் மத்தியில் உரையாற்றினர்.
திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் மாணவிகள் பின்னர் பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், "தமிழ்நாட்டில் தற்கொலையை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்பார்ப்பே காரணம். மாணவர்கள் மன உளைச்சல் அடையக் கூடாது என்பதற்காகவே அரியர் வைத்தவர்கள் அனைவரையும் தேர்ச்சிபெற்றதாக இந்த அரசு அறிவித்தது" என்றார்.
இதையும் படிங்க:'நீட் தேர்வை ரத்து செய்' வாசங்கள் அடங்கிய முகக்கவசத்துடன் சட்டப்பேரவைக்கு வந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!