தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு காளை, யானை ஆசீர்வாதத்துடன் நடந்த திருமணம்! - மதுரை

மதுரையில் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்த புதுமண ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்த ஜோடி
ஜல்லிக்கட்டு காளையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்த ஜோடி

By

Published : Dec 12, 2022, 9:31 AM IST

மதுரை: மேலமாசிவீதி பகுதியை சேர்ந்த மதன்குமாருக்கும், கூடல்நகர் பகுதியை சேர்ந்த சுபத்ராவுக்கு ஒத்தக்கடை பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மணமக்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரில் யானை, ஜல்லிக்கட்டு காளைகள், நாய்கள் உள்ளிட்ட மணமகன் வளர்த்த விலங்குகளின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும் திருமணத்திற்குப் பின்பு நடைபெற்ற திருமண விருந்தின் போது உற்றார் உறவினரோடு சேர்த்து, தான் வளர்த்த தமிழ் என்ற ஜல்லிக்கட்டு காளைக்கு விருந்து வழங்கும் வகையில் மணமக்கள் தங்களது கைகளால் உணவு வழங்கினர். இதற்காக ஜல்லிக்கட்டு காளை திருமண மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டது.

ஜல்லிக்கட்டு காளையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் செய்த ஜோடி காளைக்கு திருமண விருந்தை ஊட்டி விட்டனர்.

நாளுக்கு நாள் நாகரிகம் வளர்ந்துவரும் ஆன்ட்ராய்டு உலகத்தில் தான் வளர்க்கும் ஜீவராசியைத் தனது திருமணவிழாவிற்கு அழைத்துவந்து பெருமைப்படுத்திய மணமக்களின் செயலை கண்டு திருமணத்திற்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ஜல்லிக்கட்டின் தலைநகரமாய் திகழும் மதுரையில் ஜல்லிக்கட்டு காளையையே முதன்மைப்படுத்தி திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:காரில் தொங்கியபடி பயணம்.. சென்னை மேயர் பிரியாவுக்கு சிக்கல்!

ABOUT THE AUTHOR

...view details