மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி.
தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும், அதில் மாற்றமில்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.