துபாயிலிருந்து கோரெண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று 143 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் கரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கண்காணிப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்ல அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பின்னர், ஒரு குழுவினரை மதுரை சின்ன உடப்பு பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியிலும் (120 படுக்கை வசதி), மற்றொரு குழுவினரை ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் (60 படுக்கை வசதிகள்) உள்ள மையத்திலும் தங்கவைத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.