தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு - ஜூன் விசாரணை!

வல்லுநர்களையும், ஆன்மிகவாதிகளையும் கொண்டசிறப்பு குழு அமைத்து, கோவில் சடங்கு சம்பிரதாயங்களை கோவில் நிர்வாகம் முறையாய் கடைப்பிடிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பக்தர்களிடம் கோவில் நிர்வாகப் பொறுப்பை வழங்கத் தேவையானவற்றை ஆய்வு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்கக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

By

Published : May 1, 2021, 11:44 AM IST

கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைப்பது
கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைப்பது

மதுரை: பக்தர்களிடம் கோவில் நிர்வாகப் பொறுப்பை இந்து சமய அறநிலையத் துறை வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய பொது நல மனு மீதான விசாரணை ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

கோவையை சேர்ந்த ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜெகதீஸ் வாசுதேவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது வழக்கறிஞர் தினேஷ் ராஜா மூலம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் வெளிப்புற தணிக்கை செய்ய வேண்டும்.

கோவில்களின் கட்டிட அமைப்பு அதனுடன் தொடர்புடைய நில புலங்கள், கோவில்களின் அசையும் அசையா சொத்துக்கள், அவற்றின் தற்போதைய நிலவரம் என்ன, அவற்றின் வாடகை பாக்கி நிலவரங்கள், கோவில்களில் வழக்கில் இருக்கும் சடங்குகளும் ஆன்மீக செய்முறைகளும் புழக்கத்தில் உள்ளனவா, மக்களிடமிருந்து காணிக்கையாக பெறப்படும் தொகையின் நிலவரம், கோவில் சார்ந்த செலவுகள் ஆகியவை குறித்து வல்லுநர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

வல்லுநர்களையும், ஆன்மிகவாதிகளையும் கொண்டசிறப்பு குழு அமைத்து, கோவில் சடங்கு சம்பிரதாயங்களை கோவில் நிர்வாகம் முறையாய் கடைப்பிடிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பக்தர்களிடம் கோவில் நிர்வாகப் பொறுப்பை வழங்கத் தேவையானவற்றை ஆய்வு செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்கக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததால், ஜூன் மாதம் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details