தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது! - ஆசிரியர்கள் ஒய்வு பெறும் வயது

மதுரை: பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்ற பிறகு பணி நீட்டிப்பு பெறும் ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Jun 10, 2020, 11:37 AM IST

இந்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58இல் இருந்து 59 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணையின் பலனை தங்களுக்கும் வழங்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜெ. நிஷாபானு, மனுதாரர்களை பணியிலிருந்து விடுவிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதே கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓய்வு பெற்று கல்வியாண்டு முடிய பணி நீட்டிப்பு பெற்ற 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு வயது உயர்வு அரசாணையின் பலனை கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் விசாரித்தபோது, மனுதாரர்கள் பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்றுள்ளனர். கல்வி ஆண்டின் மத்தியில் ஓய்வுப் பெற்றதால் மாணவர்களின் நலன் கருதி ஒப்பந்த அடிப்படையில் அவர்களுக்கு கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயது உயர்வு அரசாணை பொருந்தாது. எனவே மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details