தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐநா சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாணவி! - மதுரை, இளமனூர்

மதுரை: தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த மாணவி முதன்முறையாக ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐநா

By

Published : Sep 28, 2019, 3:14 PM IST

மதுரை மாவட்டம் இளமனூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற செல்வி பிரேமலதா 2008ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தமிழ்நாடு அரசின் மனித உரிமை கல்வி பயின்று மனித உரிமைக் கல்வி வகுப்புகளில் மிக ஆர்வத்தோடு பங்குபெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது கல்லூரியில் படித்துவரும் மாணவி பிரேமலதாவை வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சிலின் பொதுக்கூட்டத்தில் மாணவி கலந்துகொண்டு மனித உரிமை கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்த மற்றும் பாதுகாப்பு குறித்த தலைப்பில் பேசவிருக்கிறார். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து மாணவிக்கு அழைப்பு வந்ததுள்ளது.

பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதன்முறையாக ஐநா சபையில் உரையாற்றவிருப்பதால் மாணவி பிரேமலதாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிக்கலாமே: "உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!

ABOUT THE AUTHOR

...view details