தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் முடி திருத்துவோர் நலச் சங்கம் போராட்டம்! - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

5 விழுக்காடு இடஒதுக்கீடு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதுகாப்பு, வீரத் தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த, இறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று (பிப்.26) போராட்டம் நடைபெற்றது.

மருத்துவர் சமூதாய மக்கள் போராட்டம்
மருத்துவர் சமூதாய மக்கள் போராட்டம்

By

Published : Feb 27, 2021, 7:55 AM IST

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு முழுவதும் முடி திருத்துவோர் நலச் சங்கம் போராட்டம்!

வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 250க்கும் மேற்பட்ட மருத்துவ சமுதாய மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மதுரை

மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. அண்ணாநகர் பகுதியில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க மாநில துணைத் தலைவர் ஞானசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். அதன் செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் அவுரி திடலில் மருத்துவர் சமுதாய மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: குடவாசல் உபரிநீர் திட்டத்தைக் கைவிடுங்கள் - கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details