தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பு! - மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் மழை

மதுரை சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பு!
மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பு!

By

Published : Jun 23, 2021, 8:26 PM IST

மதுரையில் இன்று (ஜூன். 23) மாலை 5.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில். மதுரை தல்லாகுளம், சிம்மக்கல், கோரிப்பாளையம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை நகர் பகுதியிலும் மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மதுரையில் பலத்த காற்றுடன் திடீர் மழை - மின்சாரம் துண்டிப்பு!
இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. அங்காங்கே மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தன. மேலும், மின் தடை ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மதுரை ராஜாஜி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையம் முன்பாக இருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது. திடீர் மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ABOUT THE AUTHOR

...view details