மதுரை: மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆர்எஸ்எஸ் பிரமுகராவார். இந்நிலையில் நேற்று (செப் 24) மாலை அப்பகுதியில் வேகமாக வந்த நபர் ஒருவர், கிருஷ்ணன் வீட்டின் வாசலில் நின்றவாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
இதனிடையே அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்று கொண்டிருந்த மற்றொரு நபருடன் ஏறி, பெட்ரோல் குண்டு வீசிய அந்த நபர் தப்பியோடினார். பெட்ரோல் குண்டு வீசியதில் வீடு தீ பற்றி எரியத் தொடங்கியது. தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சிட்லபாக்கத்தில் வசித்து வந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் சீதாராமன் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.