தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம் குறித்து கேள்வி - சு. வெங்கடேசன் எம்.பி - நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன்

20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களுக்கே முறையான ஒதுக்கீட்டு அடிப்படையில் வேலை வழங்கப்படாத நிலையில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியாக உள்ளதாக சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியாக உள்ளது- சு. வெங்கடேசன் எம்.பி
நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம் குறித்து அதிர்ச்சியாக உள்ளது- சு. வெங்கடேசன் எம்.பி

By

Published : Jul 24, 2022, 4:03 PM IST

மதுரை:நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ராணுவ வீரர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியும் அதற்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட பதில் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அக்னிபத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ் காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன்.

முன்னாள் இராணுவத்தினருக்கு மறு வேலை வாய்ப்பிற்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அப்பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் எவ்வளவு சதவீதம் உள்ளனர் என்பதே என் கேள்வி. (நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண்: 1149 ஜூலை 22, 2022)

அதற்கு பதில் அளித்த பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் இராணுவத்தினருக்கு மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P), மத்திய ஆயுதப் படை (CAPFs), (10 சதவீதம் - குரூப் "சி " - 10 சதவீதம், குரூப் டி - 20 சதவீதம், மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவி வரையிலான நேரடி நியமனங்களில் 10 சதவீதம். மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி - 14.5 சதவீதம், குரூப் டி - 24.5 சதவீதம், பாதுகாப்பு காவல் கார்ப்ஸ் (DSC) - 100 சதவீதம் என்ற அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.

இதனடிப்படையில் பணி நியமனங்கள் பெற்றவர்கள், 2014ஆம் ஆண்டில் 2322 பேரும், 2015 - 10982, 2016 - 9086, 2017 - 5638, 2018 - 4175, 2019 - 2968, 2020 - 2584, 2021ஆம் ஆண்டில் 2983 பேரும் ஆவர். கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையோடு 2017 -2021 ஐந்தாண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு இருக்கிறது. 2015இல் 10000ஐ தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள் 2019 - 2021க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தலா 3000 ஐ கூட கடக்கவில்லை.

சில நேரம் எண்ணிக்கை கூட சரியான சித்திரத்தை தராது. ஆகவே அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது என்று பார்த்தால் அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.

இது 30.06.2021 இல் உள்ள நிலைமை. முன்னாள் இராணுவத்தினர் சதவீதம் இதுதான். 1 மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் (CCS & P) குரூப் சி -1.39 சதவீதம், குரூப் டி- 2.77. 2 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் (CPSUs), குரூப் சி - 1.14 சதவீதம், குரூப் டி- 0.37 சதவீதம் 3 பொதுத் துறை வங்கிகள் (PSBs) குரூப் சி 9.10 குரூப் -21.34, 4 மத்திய ஆயுதப் படை (CAPFs) குரூப் "ஏ"2.20, குரூப் "பி" 0.87 குரூப் "சி" 0.47, குரூப் "டி" 0.00. அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அதிக பட்ச சதவீதம் 3 சதவீதத்தை தாண்டவே இல்லை. ஒரு சதவீதத்திற்கும் கீழே இருக்கிற இடங்கள் உள்ளன. ஜீரோ சதவீதம் கூட உள்ளது.

ஏற்கனவே உள்ள முன்னாள் இராணுவத்தினர் நிலைமையே இதுதான். மறு வேலை வாய்ப்பு இல்லை. வேலை கிடைத்தால் இருந்திருக்கக் கூடிய இராணுவப் பணியின் கடைசி ஊதியம் புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது என்ற நடைமுறைக்கும் இடம் இல்லை. 20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ்கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன? என அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:குரூப் 4 தேர்வு - தாமதமாக வந்தவர்களை அனுமதிக்க மறுப்பு - அதிகாரிகளுடன் தகராறு

ABOUT THE AUTHOR

...view details