மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கல்வித்தகுதியில், சமஸ்கிருதம், பாலி உள்ளிட்ட மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ் அதில் இடம் பெறவில்லை.
'மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் தமிழ் இல்லை' - சு. வெங்கடேசன் கண்டனம் - Su venkatesan MP tweet
மதுரை: மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் இடம்பெறாதது கண்டனத்திற்குரியது என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார்.
'மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்பில் தமிழ் இல்லை' - சு. வெங்கடேசன் கண்டனம்
இதுதொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்வீட் செய்துள்ளார். அதில், "மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித் தகுதியில், செம்மொழி வரிசையில் தமிழ் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ரயில் டிக்கெட் குறுஞ்செய்தி இந்தியில் வந்தது ஏன்? தெற்கு ரயில்வே விளக்கம்