தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்கோடா விற்று பரப்புரை செய்த இந்திய மாணவர் சங்கத்தினர் - பக்கோடா விற்பனை

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் பக்கோடா விற்று பரப்புரை மேற்கொண்டனர்.

backoda

By

Published : Apr 2, 2019, 8:01 AM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இந்திய மாணவர்கள் சங்கத்தினர் (SOFI), மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக பக்கோடா விற்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பாலு இதுகுறித்து பேசுகையில், “படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினால் பக்கோடா தொழில் செய்ய சொல்கிறார்.

அமித்ஷாவிடம் கேட்கும்போது ஏதாவது செய்துகொள்ளுங்கள் என்றும், திரிபுரா முதலமைச்சர் பீடா விற்கும் தொழில் செய்யுங்கள் என்றும் கூறுகின்றனர்.

எங்களை பொறுத்தவரையில் எதுவேண்டும் என்றாலும் செய்துகொள்வோம். ஆனால் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறி அதனை நிறைவேற்றி தராத அரசை தோல்வியடைய செய்யவேண்டும்” என்றார்.

பிரதமர் நரேந்திரமோடி 2018ஆம் ஆண்டு பேசுகையில், இளைஞர்கள் பக்கோடா விற்பதன் மூலம் சுயதொழில் செய்யலாம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details