மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில், அதன் பொதுக்குழு கூட்டம் நேற்று (அக் 07) நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிகார வரம்பு மீறி செயல்பட்ட மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலரை உடனடி பணியிடை நீக்கம் செய்யக்கோரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த அக்டோபர் 2 முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், நேற்றைய முன்தினம் (அக்.6) சுகாதாரத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். CHO பணியிடை நீக்கம் குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாக, "அதிகார வரம்பு மீறி நடந்து கொண்ட மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலரை உடனடி பணியிடை நீக்க கோரி நடைபெற்று வரும் நியாயமான போராட்டத்திற்கு அரசு உரிய தீர்வு காணும் வரை போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.