திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து விரகனூர், மேலஅனுப்பானடி, வில்லாபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்தார்.
நிலம் தர மறுத்தவர்களுக்கா வாக்களிக்க போகிறீர்கள் - சீறும் ஸ்டாலின் - ஸ்டாலின்
மதுரை: கருணாநிதியைஅடக்கம் செய்ய 6 அடி நிலம் கொடுக்காதவர்களுக்கா வாக்களிக்க போகிறீர்கள் என ஸ்டாலின் திருப்பரங்குன்றம் தேர்தல் பரப்புரையில் மக்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது அவர், "அதிமுகவில் இருந்து மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதிமுகவுக்கு சரியான பதிலடியை கொடுத்தேன். கருணாநிதி இறந்ததற்கு 6 அடி நிலம் கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பினேன். பிறகு நேரடியாக அவரை சந்தித்து வாய் விட்டு அண்ணா சமாதி அருகில் இடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நீதிமன்றத்தை நாடிய பிறகுதான் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய முடிந்தது. கருணாநிதிக்கு 6 அடி நிலம் தர மறுத்தவர்களுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்? 100 நாள் வேலை திட்டத்தை 120 நாட்களாக மாற்றம், கேபிள் கட்டணம் பழையபடி ரூ 100 , விவசாய கடன் தள்ளுபடி போன்ற ஏழை மக்களுக்கான எண்ணற்ற சலுகைகளை திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளோம்." என்றார்