மதுரை:தமுக்கம் மைதானத்தில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த அவ்வமைப்பின் நிறுவனர் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் பல்வேறு ஆறு, குளங்களை நாங்கள் புனரமைத்து உள்ளோம். அதேபோல வைகை ஆற்றையும் புனரமைக்க உள்ளோம். காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கி விடும்.
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதை பயன்படுத்தாமல் தடுப்பதற்கு சுவாசப் பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களில் இருந்து மீள்வதற்கு, போதை வஸ்துக்கள் அளிக்கும் இன்பத்தை விட மேலான இன்பம் அளிக்கும் பயிற்சிகளை துவங்கியுள்ளோம்.