இலங்கையைச் சேர்ந்தவர் சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொடா லொக்கா. பிரபல தாதாவான இவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏழு பேரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஜூலை 3ஆம் தேதி அங்கொடவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அப்போது அவருடன் இருந்த காதலி அமானி தாஞ்ஜி மற்றொரு பெண்ணான சிவகாமசுந்தரியுடன் சேர்ந்து பெயரை மாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததால், கோவை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னர் இந்தப் பெண்கள் இருவரும் தியானேஸ்வரன் என்பவரின் உதவியோடு மதுரைக்கு அங்கொடாவின் உடலைக்கொண்டு வந்து தகனம் செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்