மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கான தனிச் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் சங்குமணியால் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாகத் தற்போது உலகமெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் தனி சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கிய ஆணையிட்டுள்ளார்.
கொரோனோ வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அதனடிப்படையில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு என்று தனிச் சிகிச்சைப் பிரிவு ஒன்றை மருத்துவமனை முதல்வர் சங்குமணி இன்று தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாடு சுகாதாரத் துறையின் உத்தரவின்பேரில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் பாதிப்பிற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக தனிச்சிகிச்சைப் பிரிவினை தொடங்கியிருக்கிறோம். இது முன்னேற்பாட்டு நடவடிக்கை மட்டுமே. மதுரையில் இதுவரை அந்த வைரஸால் எந்த ஒரு தனிநபரும் பாதிக்கப்படவில்லை.
மருத்துவமனை முதல்வர் சங்குமணி பேட்டி அவசர கால உதவிக்காக மதுரை அரசு மருத்துவமனை தொடர்பு எண்களையே பயன்படுத்தலாம். சளிப் பிடித்தல், இருமல், மூக்கடைப்பு, தும்மல் உள்ளிட்டவையே அறிகுறிகளாக இருக்கும். நுரையீரலுக்குப் பரவி மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படுவதுதான் இந்த வைரஸின் முற்றியநிலை” என்றார்.
இதையும் படிங்க:கொரோனா வைரஸ்: சீனாவில் இருக்கும் இந்தியர்களை கண்டறிவதில் சிக்கல்