ரயில் பயண பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி - கட்டணமும் குறையுது மக்களே! - ரயில் பயண பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி
கரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட சிறப்பு விரைவு ரயில்கள் அனைத்தும் பழைய கட்டணத்துடன் வழக்கமான ரயில்களாக மாற்றப்பட உள்ளதாகத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாறுகின்றன
By
Published : Nov 14, 2021, 7:50 AM IST
மதுரை:கரோனா தொற்று முதல் அலையின்போது ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பிறகு சில முக்கிய விரைவு ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன.
தற்போது அந்த விரைவு ரயில்கள் வழக்கமான ரயில்களாகப் பழைய கட்டணத்துடன் இயக்கப்பட இருக்கின்றன. ரயில்களுக்கு ஐந்து இலக்க எண்கள் வழங்கப்படுவது வழக்கம்.
ரயில் பயண பிரியர்களுக்கு ஒரு இனிய செய்தி
அதன்படி சிறப்பு ரயில் எண்களின் முதல் இலக்கம் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும். இந்தச் சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக இயங்க இருப்பதால் பழைய வண்டி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பல ரயில்களுக்கு முதல் இலக்கம் மட்டும் மாறியது.
கட்டணமும் குறையுது மக்களே
கட்டணம் குறையுது மக்களே
அந்த ரயில்களுக்கு முதல் இலக்கமான பூஜ்ஜியத்திற்குப் பதிலாக ஒன்று அல்லது இரண்டு என்ற எண் மட்டும் மாற்றம்செய்யப்படுகிறது. சில ரயில்களுக்கு ஐந்திலக்கங்களும் மாற்றப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட ரயில்களுக்கான பழைய, புதிய எண், ரயில் வழித்தடம், ரயில் சேவை விவரங்கள் இதோ...