திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்க மதுரை ரயில்வே கோட்டம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06910) திருச்செந்தூரில் இருந்து அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் (06909) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 30 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.