தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை - திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்களை பயணிகள் வசதி கருதி இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை -  திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள்; தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை - திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

By

Published : Dec 20, 2022, 10:53 PM IST

Updated : Dec 21, 2022, 9:02 AM IST

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்திலிருந்து டிசம்பர் 22 வியாழக்கிழமை அன்று இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022), டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்‌.

மேலும் தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 23 வெள்ளிக்கிழமை அன்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் 2 குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியுடன் கூடிய ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலைய விவகாரம்; அமைச்சர் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை - முழுவிவரம்

Last Updated : Dec 21, 2022, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details