மதுரை: ஜனவரி 9 அன்று ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில் (22622) மற்றும் ஜனவரி 10 அன்று கன்னியாகுமரியிலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில் (22621) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) ஜனவரி 11 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பகுதியாக ரத்தாகும் ரயில்கள்:
1. பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) ஜனவரி 8, 9, 11 ஆகிய நாட்களில் விருதுநகர் - திருச்செந்தூர் இடையையும் ஜனவரி 10 அன்று மதுரை - திருச்செந்தூர் இடையையும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
2. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஈரோட்டிலிருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16845) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை திண்டுக்கல் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
3. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் நாகர்கோவிலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
4. கோயம்புத்தூர் - நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில்கள் (16322/16321) ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் ஈரோடு - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
5. ஜனவரி 9, 10 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) மற்றும் ஜனவரி 10, 11 அன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய புனலூர் விரைவு ரயில் (16731) ஆகியவை திருநெல்வேலி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
6. ஜனவரி 9, 10 அன்று சென்னையிலிருந்து திருச்செந்தூர் புறப்பட வேண்டிய செந்தூர் விரைவு ரயில் (16105) மற்றும் ஜனவரி 10, 11 அன்று திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் புறப்பட வேண்டிய செந்தூர் விரைவு ரயில் (16106) ஆகியவை திருச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.