இது குறித்து தென்னக ரயில்வே, மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருமங்கலம் - துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய இரட்டை ரயில் பாதையின் இணைப்புப் பணிகள் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தன. மின்னணு அடிப்படையில் ரயில் இயக்கம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ரயில் இயக்கம் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கணினிமயமாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று (மார்ச்.30) சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரயில்கள் மற்றும் நாகர்கோவில், பெங்களூர் சிறப்பு ரயில்கள் ஆகியவை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.