மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட்ட ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த வழக்குடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.
முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு; ஸ்டாலின் மீது வழக்கு - MK Stalin
மதுரை: முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மு.க. ஸ்டாலின் மீது வழக்கு
இந்த நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக மாற்றம் செய்யப்படுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.