தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’சிஏஏ சட்டம், ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பாஜக’ - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு - சிஏஏ போராட்டங்கள் தமிழ்நாடு

மதுரை: பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

sitaram
sitaram

By

Published : Feb 16, 2020, 9:31 PM IST

மதுரை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அமைதியான முறையில் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

ஆனால், பாஜக அரசு ஆதரவு பெற்ற மாநிலங்களில் காவல்துறை மூலம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அசாம், கர்நாடக, புதுடெல்லி ஆகிய மாநிலங்களில், காவல்துறை பாஜக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது.

சீதாராம் யெச்சூரி செய்தியாளர் சந்திப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை மூலம் தடியடி நடத்தப்பட்டுள்ளது. அமைதியாக நடைபெறும் போராட்டம் என்பது தேசத்திற்கு எதிரானதல்ல என்று மும்பை நீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை அனைவரும் ஏற்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது.” என்றார்.

இதையும் படிங்க: போராட்டம்... தடியடி... போர்க்களமாய் மாறிய வண்ணாரப்பேட்டை

ABOUT THE AUTHOR

...view details