மதுரை:பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 23ஆவது மாநில மாநாடு பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது, "ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து, பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் ஒரு ஜனநாயக யுத்தம் நடத்த வேண்டியுள்ளது.
அப்படி ஒரு யுத்தத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அதை முன்னெடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படும் விதம், இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 23ஆவது மாநில மாநாடு பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்தை உடனே கூட்டுங்கள், அதில் தமிழ்நாட்டின் நலன் மட்டுமல்ல இந்தியாவின் நலனே உள்ளது. மதச்சார்பற்ற தன்மையை காக்க இந்த கூட்டம் அவசியமாக படுகிறது. 2024ல் மாற்று அணியை உருவாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். அப்போது மோடி திருப்பி அனுப்பபடுவார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு வீழ்ச்சியை தந்தார்கள். அதே போன்று நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும். அப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்று சக்தியாக உருவாகும் என்றார்.
தமிழ்நாடு மாநிலக்குழுவின் 23வது மாநில மாநாட்டு செந்தொண்டர் பேரணி 2024 -ல் ஜனநாயக ஆட்சி மலரும். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவுடன் இணைந்து அந்த அரசியல் கடமையை ஆற்றும் பணியை மார்க்சிஸ்ட் கட்சி செய்யும் என்று தெரிவித்தார்.
2024ல் மோடி திருப்பி அனுப்பபடுவார்.. அதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது -மதுரையில் சீத்தாராம் யெச்சூரி சூளுரை இந்த பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: EXCLUSIVE: 'பிரதமர் மோடிக்கு சுயமரியாதை இருந்தால் சீனா செல்லமாட்டார்' - பாஜக எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி