தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிழலில்லா நாள் - பிற மாவட்டங்களிலும் செப். 1 வரை காணலாம் - madurai latest news

தமிழ்நாட்டில் நிழலில்லா நாள்களைப் பிற மாவட்டங்களிலும் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதிவரை அனைவரும் காணலாம் என மதுரை மாவட்ட அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிழலில்லா நாள்
நிழலில்லா நாள்

By

Published : Aug 28, 2021, 10:19 AM IST

மதுரை: நேற்று (ஆகஸ்ட் 27) நிழலில்லா நாள் வானிலை நிகழ்வு நடைபெற்றது. நேற்று காலையிலிருந்தே மதுரை மாவட்டம் முழுவதும் மேகமூட்டமாக இருந்ததால் சூரியனைக் காண முடியாத நிலை தொடர்ந்திருந்தது.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சரியாகப் பிற்பகல் 12.19 மணிக்கு நிழலில்லா அறிவியல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் கிடைத்த சூரிய ஒளியைக் கொண்டு அறிவியல் ஆய்வாளர் லெனின், தமிழ்க்கோவன் தலைமையில் மாணவர்களுக்குச் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிழலில்லா நாள்

நிழலில்லா நாள்

ஆண்டுதோறும் இரண்டு நாள்களில் மட்டும் மதிய நேரத்தில் நிழலைப் பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் விழும். இதுதான் நிழலில்லா நாள் என அழைக்கப்படுகிறது. இந்த நிழலில்லா நாள் ஆண்டுதோறும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.

நிழலில்லா நாள்
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிழலில்லா நாள் வந்தது. ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி இந்த நிகழ்வு சென்னையில் நிகழத் தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாட்டின் ஓசூர், கிருஷ்ணகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நிழலில்லா நிகழ்வு நடைபெற்ற நிலையில் நேற்று மதுரையில் நிழலில்லா நிகழ்வு நடைபெற்றது.

நிழலில்லா நாள் தோன்றும் நேரம்

இது குறித்து, ஆய்வாளர்கள் லெனின், தமிழ்க்கோவன் ஆகியோர் பேசுகையில், ”ஒரு சில நொடிகள் மட்டும் தென்பட்ட இந்த நிகழ்வின்போது மாணவர்கள் வட்ட வடிவில் கைகோத்தபடி நின்ற நிலையில் நிழலில்லாமல் காணப்பட்டது.

நிழலில்லா நாள்
இதனைத் தொடர்ந்து நிழலில்லாத நிகழ்வு இன்று (ஆகஸ்ட் 28) விருதுநகரில் 12.20 மணிக்கும், கம்பம், தேனியில் 12.23 மணிக்கும், கோவில்பட்டியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி 12.20 மணிக்கும், தென்காசியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி 12.12 மணிக்கும், நெல்லையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி 12.20 மணிக்கும், தூத்துக்குடியில் 12.19 மணிக்கும், கன்னியாகுமரியில் செப்டம்பர் 1ஆம் தேதி 12.20 மணிக்கும் தென்படும்.
அதனையடுத்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நிழலில்லா நாள் நிகழ்வு உருவாகும்” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details