மதுரை:மேலூர் அருகே உள்ள மணப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த மனமோகன்ராஜ் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2014ஆம் ஆண்டு வழக்கு பதிவானது. சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மனமோகன் ராஜிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000/- ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் 506 (ii) இ.த.ச. பிரிவில் 1 வருடம் சிறை தண்டனை மற்றும் 1000/- ரூபாய் அபராதமுமாக மொத்தம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 6000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
இதையும் படிங்க:ஆங்கிலப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்!