தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாபெரும் தலைவரின் போராட்டத்தை சீர்குலைத்து பேசுவது தவறானது - ரஜினிக்கு செல்லூர் ராஜூ பதிலடி - ரஜினி சர்ச்சைகள்

மதுரை: ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைப்பது போன்று பேசுவது தவறானது என அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

ரஜினிக்கு செல்லூர் கே.ராஜூ பதிலடி
ரஜினிக்கு செல்லூர் கே.ராஜூ பதிலடி

By

Published : Jan 23, 2020, 5:15 PM IST

மதுரை மாவட்டஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது, முகாமினை தொடங்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, மகாத்மா காந்தியை மறக்கக்கூடாது. அவர்தான் முதலில் கிராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

இன்று பெண்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக, துணைத் தலைவர்களாக அமர்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணமான பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை மறக்கக் கூடாது என்றார்

மேலும் அவர், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை தமிழ்நாட்டில் இருந்தே அகற்ற வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தவர் நமது முதலமைச்சர், அதன்படி கிராமப்புறங்களிலிருந்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்,

பிரதமரே காசோலையில் கையெழுத்திட முடியாது. ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் காசோலையில் கையெழுத்திடக் கூடிய அதிகாரம் உள்ளது. இந்த சட்டத்தை கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி, அவரை நாம் மறக்கக் கூடாது. மக்களுக்கு தேவையான பணிகளை செய்ய நாம் அனைவரும் ஒத்துழைப்போடு உழைக்க வேண்டும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், எப்பொழுதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன? துரைமுருகன்தான் திமுகவிற்கு தலைவராக வந்திருக்க வேண்டும். எங்களை குறை சொல்வதற்கு துரைமுருகனுக்கு எந்த அருகதையும் கிடையாது,

ரஜினி மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது, மாபெரும் தலைவரின் போராட்டத்தை, பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது. திராவிட முன்னேற்றக் கழகம் இந்த விஷயத்தை பொறுத்தவரை நழுவிப் போய் கொண்டிருக்கிறது என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details