தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ - madurai latest news

அதிமுகவில் சில மாற்றங்கள் செய்து, கட்சியை வளர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

By

Published : Oct 10, 2021, 5:45 PM IST

மதுரை: முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (அக்.10) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்து கட்சியை வளர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. தொடர்ந்து அதிமுகவில் இளைஞர்களுக்குப் புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும். தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது' என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறிய சில வார்த்தைகளையே, செல்லூர் ராஜுவும் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:பிரதமர் நரேந்திர மோடி மாபெரும் ஜனநாயகத் தலைவர்- அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details